சிங்கம்புணரி அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 3 May 2022 12:39 AM IST (Updated: 3 May 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே பிரான்மலை கிராமத்தில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.

சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கிராமத்தில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் விநாயகர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் வற்றிய நிலையில் கண்மாயில் மீன் பிடி திருவிழா நடத்த கிராமத்தார்கள் முடிவு செய்து மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. காலை 8 மணிக்கு கிராம முக்கிய பிரமுகர்கள் வெள்ளைக்கொடி காட்டினர். 
இதையடுத்து பிரான்மலை, பி.மதகுபட்டி, முட்டா கட்டி, ஒடுவன்பட்டி, கட்டுகுடிபட்டி, வேங்கைபட்டி, கோவில்பட்டி, வையாபுரி பட்டி, மருதிபட்டி, எஸ்.வி மங்கலம், அ.காளாப்பூர் போன்ற பகுதியில் இருந்த கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு  வலைகளை கொண்டும் துணிகளை கொண்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டிபோட்டு மீன்களை பிடித்துச் சென்றனர்.
அதிக மீன்கள்
கெளுத்தி, ஜிலேபி, விரால், குரவை, ஜல்லிக்கெண்டை ஆகிய மீன்கள் அதிக அளவில் சிக்கின. கிராம மக்கள் அதிக மீன்கள் கிடைக்க பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர். கோடை காலம் முடிந்து குளிர்காலம் நேரத்தில் போதுமான மழை பெய்யும் மழை எதிர்பார்த்து இப்பகுதி விவசாயிகள் மீன்பிடித்து விழாவை நடத்தினர்.
 நேற்று பிரான்மலை விநாயகர் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

Next Story