கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு


கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 12:44 AM IST (Updated: 3 May 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்ெகாடுைம வழக்கில் ஹரிஹரன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மாணவர்கள் ஆவர். அந்த 4 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் கைதாகி, சிறையிலுள்ள ஹரிஹரன் உள்பட மற்ற 4 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அவர்கள் 4 பேரையும் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த (பொறுப்பு) நீதிபதி கந்தகுமார், வருகிற 16-ந் தேதி வரை 15 நாட்கள் அவர்களுக்கான நீதிமன்ற காவலை நீட்டித்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story