நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.20.92 லட்சம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.20.92 லட்சம் கிடைத்தது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவிலில் உள்ள 21 உண்டியல்களையும் கோவில் மண்டபத்துக்கு கொண்டு வந்து திறந்து, காணிக்கைகளை எண்ணினர். நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், தனலட்சுமி என்ற வள்ளி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் சிவசுந்தரேசன், பேஸ்கார் முருகேசன், கண்காணிப்பாளர் கவிதா ஆகியோர் முன்னிலையில், நெல்லை ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காணிக்கைகளை எண்ணினர்.
உண்டியல்களில் மொத்தம் ரூ.20 லட்சத்து 92 ஆயிரத்து 382 காணிக்கை இருந்தது. மேலும் 48 கிராம் 120 மில்லி கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும் இருந்தது. 2 வெளிநாட்டு பண நோட்டுகளும் இருந்தன. அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story