விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்


விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 May 2022 12:54 AM IST (Updated: 3 May 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இருளர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகலை வைத்து முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். 

Next Story