அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்


அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
x
தினத்தந்தி 3 May 2022 1:11 AM IST (Updated: 3 May 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
சாதாரண கூட்டம் 
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியகுழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பந்தே நவாஸ், சூரியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-   கோவிந்தசாமிநாதன்:- 22 ஆயிரம் மக்கள் தொகை உள்ள பாளையம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொள்ளவில்லை. ஆதலால் தான் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  கிராம சபைக் கூட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.
தலைவர்:- இது போன்ற பிரச்சினைகள் இனி வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். 
சீனிவாசன்: கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதி போதவில்லை. நீங்கள் கொடுக்கும் நிதியால் மக்களுக்கு எந்த வசதியும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அறிமுகம் செய்த பேக்கேஜ் டெண்டரை, தற்போதும் செய்கிறார்கள். பேக்கேஜ் டெண்டர்முறையை ரத்து செய்ய வேண்டும். அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களே பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தலைவர்:- இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். 
அடிப்படை வசதி
பண்டாரசாமி:- கொரோனா முடிந்த பின்பும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  செய்யப்படாமல் உள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்ய வேண்டும்.  தலைவர்:- மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களில் ரூ.35 ஆயிரம் மதிப்பில் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதுகுறித்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு செல்லலாம். இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யூனியன் கூட்டம் 

Next Story