சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு


சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 3 May 2022 1:17 AM IST (Updated: 3 May 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களை அனைவரும் பாராட்டினர்.

ஆலங்குளம்,
சென்னையில் மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு  சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ரோஹித், ஹிருத்திக் ரோசன், சுதர்சன், நிகிதா, ஜெர்சினி, ஹஜீதா, ராஜசரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் போட்டியில் வெற்றிபெற்று 13 தங்கப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை விருதுநகர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் பரமசிவன், மூத்த ஆசிரியர் முத்துராஜ், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன்,மாரிமுத்து, ஆனந்தகுமார், பயிற்சியாளர் லிங்கேஸ் ஆகியோர் பாராட்டினர். 

Next Story