108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 3 May 2022 1:27 AM IST (Updated: 3 May 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருேக 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 25). கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக தாய் ஊரான இளையநயினார் குளத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை திசையன்விளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினர். அதன்பேரில் அவர்களை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் கும்பிளம்பாடு அருகே சென்றபோது, ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராகேஷ்வரி பிரசவம் பார்த்தார்.

இரவு 12.40 மணிக்கு ஐஸ்வர்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஐஸ்வர்யாவிற்கு இது 2-வது பெண் குழந்தையாகும். இந்த குழந்தை, திசையன்விளை 108 ஆம்புலன்சில் பிறந்த 16-வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story