ஆலங்குளம் சிமெண்டு ஆலை புதிய வடிவில் உருவாகும்
ஆலங்குளம் சிமெண்டு ஆலை புதிய வடிவில் உருவாகும் என அமைச்சர்கள் கூறினர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் சிமெண்டு ஆலை புதிய வடிவில் உருவாகும் என அமைச்சர்கள் கூறினர்.
அரவை மில்
ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு புதிய அரவை மில் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதையடுத்து அரவை மில் அமைக்கும் இடத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து ஆலையின் பேக்கிங் பிளாண்ட், மில்ஹவுஸ் கில்லன் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆலையின் நிலைமை பற்றி டான்சம் நிர்வாக இயக்குனர் காமராஜ், ஆலை தலைவர் மாரிக்கனி ஆகியோர் அமைச்சர்களிடம் விளக்கி கூறினர்.
வேலைவாய்ப்புகள்
பின்னர் அமைச்சர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தற்போது புதிய அரவை மில் அமைத்து உள்ளோம். படிப்படியாக ஆலங்குளம் சிமெண்டு ஆலை புதிய வடிவம் பெறும். வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் டான்சம் நிர்வாக இயக்குனர் காமராஜ், கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், தங்கப்பாண்டியன், ஆலங்குளம் சிமெண்டு ஆலை தலைவர் மாரிக்கனி, தனி தாசில்தார் ரெங்கசாமி, துணை தாசில்தார் பாலமுருகன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாண்டியன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணராஜ், ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ், ஆலங்குளம் அரசு சிமெண்டு பார்வேடிங் ஏஜெண்ட் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிமெண்டு ஆலை அலுவலர் ராமர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story