சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை


சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 3 May 2022 1:42 AM IST (Updated: 3 May 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீரோ உடைப்பு
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கே.இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(வயது 50). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் பழனிசாமி, மனைவி கலா ஆகியோர் மட்டும் கே.இடையபட்டியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் பழனிசாமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு மனைவி கலாவுடன் சென்று விட்டார். 
தோட்ட வேலை முடிந்து மதியம் வீடு திரும்பிய பழனிசாமி மற்றும் அவரது மனைவி கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இரண்டு அறையில் உள்ள 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. 
40 பவுன் நகை
மேலும் பீரோவில் இருந்த சுமார் 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. பழனிசாமி மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
 இதுகுறித்த புகாரின் புழுதிபட்டி போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு நடத்தி விசாரணையை துரிதப்படுத்தினார். 
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story