மனைவியின் சமாதியில் விவசாயி தற்கொலை


மனைவியின் சமாதியில் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2022 1:56 AM IST (Updated: 3 May 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே மனைவியின் சமாதியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார்குளம், நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 85). விவசாயி. இவருடைய மனைவி அழகம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வயது முதிர்வால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் இறந்தார். மனைவி இறந்ததில் இருந்து செல்லத்துரை மனம் உடைந்து காணப்பட்டார். அவரை, அவரது மகன் முத்துக்குட்டி பராமரித்து வந்தார். இருப்பினும் அடிக்கடி மனைவியின் பிரிவால் விரக்தியில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறிய செல்லத்துரை ஊருக்கு அருகே தனது மனைவியின் சமாதிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியின் சமாதியில் விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story