ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 3 May 2022 1:59 AM IST (Updated: 3 May 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

அரியலூர்:

செத்து மிதக்கும் மீன்கள்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 96 டிகிரியில் இருந்து 107 டிகிரியை தொட்டுள்ளது. தினமும் அதிகரிக்கும் வெப்பத்தால் நகரில் உள்ள ஏரிகளில் உள்ள நீர் சூடாகி வருகிறது. இந்நிலையில் அரியலூரில் திருச்சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரியில் மீன் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் பெரிய அளவில் வளர்ந்துள்ள கட்லா, லோகு, பவானி போன்ற வகைகளை சேர்ந்த மீன்கள் ஏரியின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதாகவும், ஆனால் சிறிய குஞ்சுகளாக உள்ள ஜிலேபி மீன்கள் வெப்பத்தின் காரணமாக செத்து மிதப்பதாகவும் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஏரியை பார்வையிட்டு, மீன்கள் வெப்பத்தால் செத்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். இதுபற்றி கூட்டுறவு மீன் வளர்ப்போர் சங்கத்திற்கும் தகவல் தெரிவித்தனர். செத்த மீன்களை ஏரியில் இருந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story