விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை வழிபாடு


விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
x
தினத்தந்தி 3 May 2022 1:59 AM IST (Updated: 3 May 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. கார்த்திகையை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர், உற்சவ மூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வில்லேந்திய வேலவர், உற்சவமூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தந்தனர். சுவாமிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. மேலும் கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். சுவாமிக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Next Story