பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2022 2:03 AM IST (Updated: 3 May 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி செல்லம்(வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது. ராஜீ சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த ராஜீ நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் செல்லம் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்லம் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அவரது தம்பி செல்வகுமார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தூக்குப்போட்ட நிலையில் செல்லம் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story