சூதாடிய 6 பேர் கைது
தினத்தந்தி 2 May 2022 9:02 PM (Updated: 2 May 2022 9:02 PM)
Text Sizeதேவர்குளம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனவடலிசத்திரம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் தேவர்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மடத்துப்பட்டி காளியம்மன் கோவிலில் வைத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் சூதாடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேவர்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தார். அதில் ராமர் பாண்டி (வயது 35) என்பவர் சப்-இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire