ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே ஆறான்விளையை சேர்ந்தவர் நேசமணி (வயது 57). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் விஷம் குடித்த நிலையில் வீட்டில் வந்து கட்டிலில் படுத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலைக்கு சென்று மயக்கம் அடைந்தார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேசமணி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story