அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு


அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 2:57 AM IST (Updated: 3 May 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.

மதுரை,

நாகர்கோவிலை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சீதா (வயது 33). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஊருக்கு செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நள்ளிரவு 1 மணிக்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story