‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ரேஷன்கடை வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வாா்டுக்குட்பட்ட கீழகைலாசபுரம் தாகூா் நகா் பகுதியில் 2,000-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரேஷன்கடை இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் ரேஷன்கடை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் நகர்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் ெதால்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் சாலைகளில் செல்லும் வாகனங்களின் குறுக்ேக பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்களை பயமுறுத்தும் தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ராம்குமாா், விருதுநகர்.
சுகாதார சீர்கேடு
மதுைர பெத்தானியாபுரம் என்.எஸ்.கே. வீதியில் குப்பைவண்டிகள் சரிவர வராத காரணத்தினால் ெபாதுமக்கள் குப்பைகளை வீதிகளில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் தேங்குவதுடன் துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
முத்து, மதுைர.
பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம் மதுரை-ராமேசுவரம் பைபாஸ் சாலை வழியாக செல்லும் புறநகர் பஸ்கள் பெரும்பாலானவை திருப்புவனம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் புறநகர் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், திருப்புவனம்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் பட்டக்குளம் கிராமத்தில் இருந்து துக்கலம்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த சாலையில் செல்வதால் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க ேவண்டும்.
சக்தி, பட்டக்குளம்.
வாகனஓட்டிகள் அவதி
மதுரை மாவட்டம் ேசாழவந்தான் கோச்சடை செல்லும் மேலக்கால் சாலை திருப்பரங்குன்றம் காளஅம்பலக்காரர் ெதருவின் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் சாலையில் நடக்கவும், வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை.
பஸ்கள் நின்று செல்லுமா?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்துமிடம் உள்ளது. இந்நிலையில் இந்த இடங்களில் புறநகர் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இ்ங்கு வரும் பொதுமக்கள், முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஏறுவதற்கு அதிக தூரம் நடந்து செல்வதால் நேரவிரயம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தபகுதிகளில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர்ப்பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் நடக்கும் பொதுமக்களை இந்தப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்துகின்றன. இரவில் நாய்கள் கூட்டமாக கூடி சண்டையிடுவதால் ஏற்படும் சத்தம் காரணமாக மக்கள் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். சுரேஷ், இளையான்குடி.
அள்ளப்படாத குப்பை
மதுரையின் முக்கியமான சுற்றுலாதலங்களில் ஒன்றான திருமலைநாயக்கா் மகால் அருகில் உள்ள சாலையோர குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ேமலும் குடியிருப்பு பகுதிகளும் அருகில் இருக்கும் நிலையில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவா, மதுரை.
Related Tags :
Next Story