புகார் பெட்டி
புகார் பெட்டி
கொடி அகற்றப்பட்டது
வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் குளத்தின் கரையில் உள்ள மின் கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்து மின் கம்பியே தெரியாத அளவுக்கு புதர் மண்டி கிடந்தது. இதனால் காற்று வீசும் போது அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுபற்றிய செய்தியும், படமும் ‘தினத்தந்தி’-யில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் படர்ந்து இருந்த கொடியை அகற்றினார்கள். இதற்காக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நடவடிக்கை
குலசேகரம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு குறள் ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்று இருக்க வேண்டும். ஆனால் அது தவறாக எழுதப்பட்டு உள்ளது. எனவே அதை திருத்தி எழுத சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-.மணிகண்டன், குலசேகரம்.
மரம் அகற்றப்படுமா?
குலசேகரம் அருகே மங்கலம் கால்வாய் கரை பகுதியில் மின்பாதையையொட்டி மரங்கள் நிற்கின்றன. இதில் ஒரு மரம் மின்கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்று வீசினால் கூட மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனே மரத்தை அகற்றி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன் தம்பி, மங்கலம்.
காத்திருக்கும் ஆபத்து
தக்கலை அருகே மூலச்சல் தாந்த விளை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மூலச்சலில் இருந்து சாரோட்டிற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் கடந்த ஒகி புயலின்போது சேதமடைந்தது. இதுவரை அந்த மின்கம்பம் மாற்றப்படவில்லை. இதனால் மின் கம்பத்தின் கீழ்பகுதியில் தற்போது வெடிப்பு ஏற்பட்டு உள்ளே உள்ள கம்பிகள் வெளியில் தெரிகிறது. எப்போது உடைந்துவிழுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதியை மக்கள் கடந்து செல்கிறார்்கள். எனவே மேலும் தாமதிக்காமல் சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லீன் சிங், தாந்தவிளை.
தடுக்க வேண்டும்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு காஜா மில் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலர் கட்டிட இடிபாடுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹிர் குளச்சல்
வீணாகும் குடிநீர்
முக்கடலில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு துவரங்காடு அருகே அரசன்குழி பகுதியில் குடிநீர் வீணாக செல்கிறது. அதை தடுக்க குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காட்வின், அரசன்குழி.
Related Tags :
Next Story