பீட்சா கடை மேலாளருக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது


பீட்சா கடை மேலாளருக்கு கத்திக்குத்து-வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 May 2022 4:09 AM IST (Updated: 3 May 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

பீட்சா கடை மேலாளரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:
சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சாரதா கல்லூரி சாலையில் உள்ள பீட்சா கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி.காலனியை சேர்ந்த சசிகுமார் (வயது 28) என்பவர் தினமும் காலையில் அவரது தோழியை கடையில் வந்து இறக்கிவிட்டு மாலையில் அழைத்து செல்வார்.
இந்நிலையில், தற்போது வேலை பார்த்து வந்த கடையில் இருந்து 5 ரோடு கடைக்கு செல்லுமாறு உரிமையாளர் வாசுதேவன் கூறியதாக மேலாளர் பாலாஜி என்பவர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் 5 ரோடு கடைக்கு செல்லமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இது தொடர்பாக பெண்ணின் நண்பரான சசிக்குமார், பீட்சா கடையின் மேலாளர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து பாலாஜி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

Next Story