தேவூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கட்டையால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு


தேவூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கட்டையால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 May 2022 4:48 AM IST (Updated: 3 May 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கட்டையால் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவூர்:
தேவூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கட்டையால் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
லாரி டிரைவர்
தேவூர் அருகே அரசிராமணி பழக்காரன் காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவருடைய மனைவி மேகலா என்கிற நீலவேணி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரமேஷ் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு லாரி டிரைவர் பணிக்காக சென்று விடுவார். மாதம் ஒரு முறைதான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அரசிராமணி செட்டிப்பட்டி வடுவச்சிகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கோவிந்தராஜ் (23) என்பவருக்கும், மேகலாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. 
கள்ளக்காதல்
இந்த பழக்கம்  நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ரமேஷ் வெளியூர் சென்று இருக்கும் நேரங்களில், மேகலா தனது கள்ளக்காதலன், கோவிந்தராஜூடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் மேகலா, தனது குழந்தைகள் பெரியவர்கள் ஆகி விட்டதால், தன்னுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொள்ளுமாறு கோவிந்தராஜிடம் கூறி உள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மேகலா தனது வீட்டில் கணவருடன் இருந்துள்ளார். அங்கு வந்த கோவிந்தராஜ், மேகலா தன்னுடன் வருமாறு அழைத்ததுடன், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.இதற்கு மேகலா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் மேகலாவை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த அவருடைய கணவர் ரமேசையும் அடித்து உதைத்தார். 
வழக்குப்பதிவு
இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தேவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story