கொளத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


கொளத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 May 2022 4:55 AM IST (Updated: 3 May 2022 4:55 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொளத்தூர்:
கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் மேட்டூர்-மைசூரு சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story