ஏற்காடு செல்லும் மோட்டார் சைக்கிள்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை
ஏற்காடு செல்லும் மோட்டார் சைக்கிள்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னங்குறிச்சி:
ஏற்காட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அதற்கு சுங்க கட்டணம் செலுத்தி வந்தனர். இனி ஏற்காட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சுங்க கட்டணம் செலுத்த தேவை இல்லை. மீறி வசூல் செய்தால் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல் ஏற்காடு பகுதி பொதுமக்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் 4 சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story