தாம்பரம் அருகே லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த ‘ஏர் ஹாரன்கள்’ பறிமுதல்


தாம்பரம் அருகே லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த ‘ஏர் ஹாரன்கள்’ பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2022 8:24 AM IST (Updated: 3 May 2022 8:24 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே வாகன சோதனையில் போது லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த ‘ஏர் ஹாரன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரம்,  

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கச்சாவடி அருகே தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிக ஒலி எழுப்பும் வகையில் ‘ஏர் ஹாரன்’ பொருத்தப்பட்டு வந்த 4 லாரிகளில் இருந்து ‘ஏர் ஹாரன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கியதோடு, ரூ.44 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறும், ‘ஏர் ஹாரன்’ பொருத்தப்பட்டு இருந்தால் அதனை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்தார்.

Next Story