பல்லாவரத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு


பல்லாவரத்தில் ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 3 May 2022 10:38 AM IST (Updated: 3 May 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரத்தில் ரூ.10 கோடி அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலை அருகே பெரிய ஏரிக்கு நீர்வரத்து செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு ஓட்டல், உடற்பயிற்சி கூடம், மெக்கானிக் ஷெட் கட்டப்பட்டிருந்தது. இதனால் மழை காலத்தில் அந்த பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் பிரபு, பல்லாவரம் தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து 3 கிரவுண்டு அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story