ஆவடியில் ரூ.42 லட்சம் மின்சார திருட்டு கண்டுபிடிப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை


ஆவடியில் ரூ.42 லட்சம் மின்சார திருட்டு கண்டுபிடிப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 May 2022 11:44 AM IST (Updated: 3 May 2022 11:44 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் ரூ.42 லட்சம் மின்சார திருட்டை கண்டுபிடித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்தது.

சென்னை, 

ஆவடி பகுதியில் மின்சார கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது, 6 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மின்சார நுகர்வோர்களுக்கு ரூ.42 லட்சத்து 38 ஆயிரத்து 267 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைக்கு முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் செலுத்தியதால், அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story