மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2022 5:23 PM IST (Updated: 3 May 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் புன்னப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மணல் கடத்தியதாக ஒதிக்காட்டை சேர்ந்த பென்னின்டோ (வயது 23), அஜித்குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story