குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 3 May 2022 6:11 PM IST (Updated: 3 May 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கண்ணாடி மாளிகையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கண்ணாடி மாளிகையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர். 

சிம்ஸ் பூங்கா

மலைகளின் ராணி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள். குன்னூரின் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. மேலும் இயற்கை காட்சி முனைகளான லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன. குன்னூர் சிம்ஸ் பூங்கா இயற்கை சூழலில் அமைந்துள்ளது. பூங்காவில் ருத்ராட்சை மரம், யானைகால் மரம், காகித மரம் போன்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் 2 நாட்கள் பூங்காவில் பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கோடை சீசன் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவில்லை. இதனால் பழக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

2½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு 

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை சீசன் வெகு சிறப்பாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது‌. இதன் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி மே மாதம் 28 மற்றும் 29-ந்தேதியில் நடைபெற உள்ளது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பூங்கா முழுவதும் பொலிவு படுத்தப்பட்டு 2½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்துபராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மலர்கள் அனைத்தும் பூக்கத்தொடங்கியுள்ளன. பூங்காவின் சிறப்பு வாய்ந்த கண்ணாடி மாளிகையில் 2 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் கற்றாழை வகையை சேர்ந்த செடிகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. தற்போது பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். இவர்கள் பூங்காவின் அழகை ரசிப்பதோடு, கண்ணாடி மாளிகை முன் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.

Next Story