கோத்தகிரியில் படுகர் நல சங்க கருத்தரங்கம்


கோத்தகிரியில் படுகர் நல சங்க கருத்தரங்கம்
x
தினத்தந்தி 3 May 2022 6:11 PM IST (Updated: 3 May 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் படுகர் நல சங்க கருத்தரங்கம்

கோத்தகிரி

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் படுகர் நலசங்கம் சார்பில் சமுதாயத்தில் நேற்றைய காலம், இன்றைய காலம், நாளைய காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு 19 ஊர் தலைவர் ராமா கவுடர் தலைமை வகித்தார். கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், முன்னாள் நாக்குபெட்டா தலைவர் ஐயாறு, கெக்கட்டி தருமன், நடுஹட்டி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பொரங்காடு சீமைக்குட்பட்ட 120 க்கு மேற்பட்ட படுகர் சமுதாய மக்கள் வாழும் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பிரமுகர்கள் தலா 2 பேர் சங்கத்தின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக ஒரசோலை தியாகராஜன், செயலாளராக மேல் அனையட்டி ரவி, பொருளாளராக திம்பட்டி சிவசுப்பிரமணியம், துணைத்தலைவர்களாக சாமில் திட்டு போஜன், இளித்துரை சங்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் உப தலைவர்கள், துணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து வரும் 15-ந் தேதி அன்று படுகர் தினத்தை முன்னிட்டு கோத்தகிரியில் இருந்து நட்டக்கல் கிராமம் வரை அமைதி ஊர்வலம் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ரவி வரவேற்றார். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுமார் நன்றி கூறினார்.

Next Story