பிதர்காடு வனச்சரகத்தில் பணியின் போது மதுபோதையில் இருந்த வனக்காப்பாளர் பணியிடை நீக்கம்
பிதிர்காடு வனச்சரகத்தில் பணியின் போது மதுபோதையில் இருந்த வனக்காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பந்தலூர்
பிதிர்காடு வனச்சரகத்தில் பணியின் போது மதுபோதையில் இருந்த வனக்காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வனக்காப்பாளர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் பிதிர்காடு, சேரம்பாடி, கூடலூர், ஓவேலி, தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வனத்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிதிர்காடு வனச்சரகர் கங்காதரன் சரக பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அதே சரகத்தைச் சேர்ந்த வனக்காப்பாளர் முருகன் என்பவர் பணியின்போது மது போதையில் இருப்பதை கண்டார். இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு முருகனை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதற்கான மருத்துவ சான்றிதழ் பெறப்பட்டு துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. பின்னர் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், பணியின் போது மதுபோதையில் இருந்த வனக்காப்பாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் முருகனிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதனால் வனத்துறை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனச்சரகர் கங்காதரன் கூறும்போது, சம்பந்தப்பட்ட வனக்காப்பாளர் முருகன் பணியின் போது மதுபோதையில் பலமுறை இருந்து வந்தார். இருப்பினும் அவர் எச்சரிக்கப்பட்டு பணியில் தொடர அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து பணியின் போது மதுபோதையில் இருந்து வருகிறார். இதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நகலும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story