மனைவியை விபசார அழகியாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட டிரைவர்


மனைவியை விபசார அழகியாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட டிரைவர்
x
தினத்தந்தி 3 May 2022 7:49 PM IST (Updated: 3 May 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மனைவியை விபசார அழகியாக சித்தரித்து முகநூலில் டிரைவர் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் 37 வயதுடைய பெண். இவருக்கும், பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான ஆனந்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. தற்போது ஆனந்த் குடும்பத்துடன் உண்ணாமலை செட்டிசாவடியில் வசித்து வந்தார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

விபசார அழகி

இதற்கிடையே ஆனந்தின் மனைவி தனது முகநூலில் (பேஸ்-புக்) உள்ள பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆனந்தின் முகநூல் பதிவுகளில் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வைக்கப்பட்டிருந்ததையும், அந்த படத்திற்கு அருகில் தன்னுடைய செல்போன் எண் மற்றும் விபசார அழகி என பதிவிட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே அவருக்கு பலர் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story