திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 75 பேர் எழுதுகின்றனர்


திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 75 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 3 May 2022 7:50 PM IST (Updated: 3 May 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 75 பேர் எழுதுகின்றனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 75 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 6-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 மாணவர்களுக்கு 10-ந்தேதியும் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளுக்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 284 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பிளஸ்-2 தேர்வை 212 பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்து 646 மாணவர்கள், 11 ஆயிரத்து 429 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 75 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
இதேபோல் பிளஸ்-1 தேர்வை 215 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 20 மாணவர்கள், 12 ஆயிரத்து 447 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 467 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 363 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 117 மாணவர்கள், 13 ஆயிரத்து 244 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 361 பேர் எழுத இருக்கின்றனர். இவர்களுக்கு 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

Next Story