விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2022 7:51 PM IST (Updated: 3 May 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி, 

பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒரு மரத்தடியில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண் சி.என். பாளையம் புதுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த புகழேந்தி மனைவி ஜெயலட்சுமி(வயது 40) என்பதும், தலையில் கட்டி ஏற்பட்டு சிகிச்சை பெற்றும் குணமாகததால் விரக்தியடைந்த ஜெயலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Next Story