கூடலூர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கூடலூர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கூடலூர்
கூடலூர் அருகே நடுவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, புன்யா வாகனம், தொடர்ந்து முதல் கால வேள்வியும், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றுதல் நிகழச்சி நடைபெற்றது. பின்னர் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், கலச புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சக்தி மாரியம்மன் கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவிலை சுற்றி இருந்த பக்தர்கள் பக்தி கரகோஷத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
Related Tags :
Next Story