கயத்தாறு அருகே வாலிபர் தற்கொலை
கயத்தாறு அருகே வாலிபர் தூத்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் வேல்பாண்டி. விவசாயி. இவரது மகன் முத்து வெளியப்பன் (வயது 24). இவரும் தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.முத்துவெளியப்பன் கடந்த 10 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் ஊரில் உள்ள அம்மன் கோவில் கொடை விழாற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த முத்து வெளிப்பன் வீட்டில் காற்றாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் கோவில் கொடை விழா முடிந்து வீடு திரும்பிய போது வீட்டினுள் தூக்கில் வெளியப்பன் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிஅழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் வழக்கு பதிவு செய்து முத்து வெளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story