தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக ஆஸ்துமா தினம் கடைபிடிப்பு


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக ஆஸ்துமா தினம் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 3 May 2022 8:20 PM IST (Updated: 3 May 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி:
 தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆஸ்துமா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நெஞ்சக நோய் மருத்துவ பிரிவு தலைவர் சங்கமித்ரா தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டீன் நேரு கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 15 முதல் 20 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். ஒவ்வாமை காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்ப நிலையில் இருக்கும் போதே டாக்டரிடம் காண்பித்தால், உரிய சிகிச்சையை எளிதாக அளிக்க முடியும். அதே போன்று மாத்திரைகள், ஊசி மருந்துகள், சுவாச பயிற்சி, சுவாச இயன்முறை சிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம். தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். புகைபிடித்தல், ரசாயன புகைகள், தூசி மற்றும் பணியின் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போதும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பரம்பரையாக ஒவ்வாமை காரணமாகவும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான டாக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story