ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டமானதால் கடனை அடைக்க திருடியதாக கைதான காதல் ஜோடி வாக்குமூலம் அளித்து உள்ளது


ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டமானதால் கடனை அடைக்க திருடியதாக கைதான காதல் ஜோடி வாக்குமூலம் அளித்து உள்ளது
x
தினத்தந்தி 3 May 2022 8:44 PM IST (Updated: 3 May 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டமானதால் கடனை அடைக்க திருடியதாக கைதான காதல் ஜோடி வாக்குமூலம் அளித்து உள்ளது


பேரூர்

ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டமானதால் கடனை அடைக்க திருடியதாக கைதான காதல் ஜோடி வாக்குமூலம் அளித்து உள்ளது.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65).

 இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். 

அப்போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போன்று நடித்து காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் காளியம்மாளி டம் நகையை பறித்தது சோமையம்பாளையம் அருகே காஸ்மா கார்டனை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கத்தை சேர்ந்த அவருடைய காதலி தேஜாஸ்வினி (20) என்பதும் தெரியவந்தது.

காதல் ஜோடி கைது

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டில் ஈடுபட்டு கைதான காதல் ஜோடி அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ்  அதிகாரிகள் கூறியதாவது

பிரசாத், ஆன்லைனில் பொருட்களை வியாபாரம் செய்து உள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் அதிகளவில் கடன் வாங்கி உள்ளார். அதை அடைக்க முடியாததால் அவர் தனது வீட்டிலேயே நகை திருடி உள்ளார். 


இதையடுத்து தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து பிரசாத் நகை பறிக்க திட்டமிட்டார். இதை தனது காதலியிடம் கூறி ஏற்றுக்கொள்ள வைத்து உள்ளார். 

இதையடுத்து அவர்கள் கடந்த 28-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த  காளியம்மாளிடம் நகைைய பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று உள்ளனர். 

காவலில் எடுக்க முடிவு

அந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் அவர்கள் சிக்கிக்கொண்டனர். காதல் ஜோடி சேர்ந்து முதன் முறையாக நகை பறிப்பில் ஈடுபட்ட போது சிக்கி உள்ளது. 

எனவே பிரசாத் தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story