காரைக்காலில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ 200 கோடியில் மாஸ்டர் பிளான் வைத்திலிங்கம் எம் பி தகவல்
காரைக்காலில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.200 கோடியில் மாஸ்டர் பிளான் தயாரித்து வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
காரைக்கால்
காரைக்காலில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.200 கோடியில் மாஸ்டர் பிளான் தயாரித்து வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
மாஸ்டர் பிளான்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவில் காரைக்கால் கணபதி நகர், எஸ்.ஏ.நகர் பகுதிகளில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பூமிபூஜை நடந்தது. பூமிபூஜை செய்து பணிகளை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் தலைமை தாங்கினார்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்காலில் வெள்ளத் தடுப்பு, பாசன வசதி உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ரூ.200 கோடி செலவில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் காரைக்காலில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
புதுச்சேரிக்கு என தனியாக பணியாளர் தேர்வாணையம் அமைப்பது, காஷ்மீரைப் போல நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தி தருவது என்பது குறித்து பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது. ஆனால் அண்மையில் புதுச்சேரி வந்த மத்திய மந்திரி அமித்ஷா இதுகுறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
ஏமாற்றம்
புதுச்சேரியை பொறுத்தவரை முக்கிய அரசு நலத் திட்டங்கள் குறித்து கவர்னர் தான் அறிவிப்பு வெளியிடு கிறார். அரசு சார்பிலோ, முதல்-அமைச்சரோ எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதுவரை புதுச்சேரி முதல்-அமைச்சர் டெல்லிக்கு சென்று யாரையும் சந்திக்காத நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா இங்கு வந்து முதல்-அமைச்சரை சந்தித்து சென்றிருப்பது பெருமைக்குரியது தான். ஆனால் இருவரும் ஒன்றுமே செய்யவில்லை என்பது மக்களுக்கும், இந்த மாநிலத்துக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story