விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது39), தொழிலாளி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story