தார்சாலை அமைக்க வேண்டும்


தார்சாலை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2022 12:00 AM IST (Updated: 3 May 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

தாணிகோட்டகத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு:
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் ஊராட்சி பிச்சகட்டளை பகுதியில் இருந்து அருகில் உள்ள அண்ணாபேட்டை ஊராட்சி ராஜன்கட்டளை பகுதிக்கு செல்லும் மண் இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மண் சாலை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. 
இந்த மண் சாலையை இரண்டு ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த சாலையின் வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். தினமும் இந்த வழியாக கடைத்தெருவுக்கு சென்று பொதுமக்கள் தங்களுக்கு தேவைகளுக்கு பொருட்களை வாங்கி வருகின்றனர். மழை காலங்களில் இந்த மண்சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படும். இதனால் இந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாணிக்கோட்டகம் பகுதியில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---


---

Next Story