தரைப்பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?


தரைப்பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 4 May 2022 12:00 AM IST (Updated: 3 May 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே ஆதலையூரில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தரைப்பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஆதலையூரில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தரைப்பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள்  எதிர்பார்த்துள்ளனர்.
தரைப்பாலம்
திருமருகல் அருகே ஆதலையூரில்,  திருமருகல்-நன்னிலம் செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக அரசு மற்றும்  தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினமும்  சென்று வருகின்றன.
 போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த  இந்த சாலையில் திருப்புகலூர், ஆதலையூர் உள்ளிட்ட இடங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் ஆதலையூரில் தரைப்பாலம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும் 
மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாலத்திற்காக தோண்டப்பட் பள்ளத்தில் தவறி விழுந்்து காயம் அடைகின்றனர். இது போல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு  முன்பு தரைப்பாலம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும்  வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.
---

Next Story