நாகூர் தர்காவில் ரமலான் சிறப்பு தொழுகை
நாகூர் தர்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகூர்:
நாகூர் தர்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ரமலான் பண்டிகை
ரமலான் பண்டிகையையொட்டி உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பை இஸ்லாமியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.
இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் நேற்று கொண்டாடினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.
நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்காவில் நேற்று காலை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
அதனை தொடர்ந்து புத்தாடை அணிந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகையில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
நாகை-கீழ்வேளூர்
இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, இரட்டைமதகடி, இருக்கை, இறையான்குடி, ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
நாகை புதுத்தெருவில் உள்ள மைதானத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் பொது செயலாளர் அலாவுதீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கமாலியா பள்ளி, நூல் கடைத்தெரு உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
---
Related Tags :
Next Story