அரிச்சந்திரபுரத்தில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள்


அரிச்சந்திரபுரத்தில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள்
x
தினத்தந்தி 3 May 2022 10:01 PM IST (Updated: 3 May 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே அரிச்சந்திரபுரத்தில், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே அரிச்சந்திரபுரத்தில், பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குடிநீர் குழாய்கள்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதி மங்கலம், அரிச்சந்திரபுரத்தில் கடைத்தெரு சாலையையொட்டி அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இதனால், அரிச்சந்திரபுரம் கடைத்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் மற்றும் கடைவீதிக்கு சென்று வருவோர் இந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்து வருகின்றனர். 
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் குழாய்களில் குடிநீர் வருவதில்லை என்றும், மேலும், அங்கு அமைக்கப்பட்ட கைப்பம்பு மற்றும் திருகு குழாய் இரண்டுமே பழுதடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். 
குடிநீர் தட்டுப்பாடு
இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல் உள்ளதால், கடுமையான சிரமம் அடைந்து வருவதாகவும், தற்போது கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த 100 லிட்டர் குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டியும் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. 
மக்கள் நின்று குடிநீர் பிடிப்பதற்காக கட்டப்பட்ட சிமெண்டு தரை தளமும் உடைந்து சேதமடைந்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story