நவ்நீத் ரானா எம்.பி. வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள்- மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது


படம்
x
படம்
தினத்தந்தி 3 May 2022 10:05 PM IST (Updated: 3 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

அனுமன் பஜனை விவகாரத்தில் கைதான நவ்நீத் ரானா எம்.பி. வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடைபெற்றதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை, 
அனுமன் பஜனை விவகாரத்தில் கைதான நவ்நீத் ரானா எம்.பி. வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடைபெற்றதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 சிறையில் அடைப்பு
அமராவதி எம்.பி. நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக கூறி இருபிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
 தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் நாளை (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
 நோட்டீஸ் 
இந்தநிலையில் நவ்நீத் ரானாவுக்கு சொந்தமாக கார் மேற்கு, 14-வது ரோட்டில் உள்ள லாவி அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய இருப்பதாக மும்பை மாநகராட்சி நவ்நீத் ரானா, ரவி ரானாவுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. 
இதுகுறித்து மாநகராட்சி அனுப்பி உள்ள நோட்டீசில், லாவி கட்டிடத்தில் 8-வது மாடியில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, புகைப்படம் எடுக்க மற்றும் அளவு எடுக்க மே 4 அல்லது அதற்கு பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Next Story