நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 814 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 814 மாணவி-மாணவிகள் எழுதுகின்றனர்.
நாகப்பட்டினம்:
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 814 மாணவி-மாணவிகள் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்புக்கு 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது.
கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நேரடி பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதன்படி நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 3 ஆயிரத்து 115 மாணவர்களும், 3 ஆயிரத்து 699 மாணவிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 814 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 பொதுத்தேர்வை 4 ஆயிரத்து 203 மாணவர்களும், 4 ஆயிரத்து 323 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 526 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4 ஆயிரத்து 517 மாணவர்களும், 4 ஆயிரத்து 467 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 984 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
64 மையங்கள்
மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 324 மாணவி-மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 64 மையங்களிலும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 41 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர்.
Related Tags :
Next Story