சி.ஆர்.பி.எப். வீரரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி


சி.ஆர்.பி.எப். வீரரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 3 May 2022 10:20 PM IST (Updated: 3 May 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

சி.ஆர்.பி.எப். வீரரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
 முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் திவாகர் (வயது28). இவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பிரிவில் காவலராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பணிபுரிந்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு வங்கியிலிருந்து பேசிய நபர் கிரெடிட் கார்டு பயன்பாட்டினை எடுத்து கூறியதை தொடர்ந்து அந்த கார்டினை திவாகர் வாங்கி வைத்துள்ளார். ஆனால், அதனை செயலாக்கம் செய்யாமல் வைத்திருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி திவாகரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் மேற்கண்ட தனியார் வங்கி மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கிரெடிட் கார்டு செயலாக்கம் செய்யாமல் உள்ளதால் அதனை விரைவில் செயலாக்கம் செய்யா விட்டால் பயனில்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார். அதற்கு தான் ஆன்லைனில் உங்களின் கார்டினை செயலாக்கம் செய்து தருவதாக கூறி ரகசிய குறியீட்டு எண்ணை பெற்றுள்ளார். இதன்பின்னர் திவாகரின் செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய எண்ணை வாங்கி கொண்டுள்ளார். கிரெடிட் கார்டு வெற்றிகரமாக செயலாக்கம் செய்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளர். அதன் பின்பு சில மணி நேரங்கள் கடந்து தனது கிரெடிட் கார்டில் உள்ள பணத்தின் விவரத்தினை திவாகர் பார்த்தபோது தனது கணக்கிலிருந்து 3 தவணைகளில் மொத்தம் ரூ.99 ஆயிரத்து 812 பணத்தினை மோசடியாக எடுத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திவாகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்படி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் திவாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story