ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுத்தால் வீதிகளில் இறங்கி போராடுவோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுத்தால் வீதிகளில் இறங்கி போராடுவோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை,
ஒலிப்பெருக்கி விவகாரம் தொடர்பாக ராஜ் தாக்கரே மீது அவுரங்காபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுத்தால் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என நவநிர்மாண் சேனாவினர் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து நவநிர்மாண் சேனா தானே மாவட்ட தலைவர் அவினாஷ் ஜாதவ் கூறுகையில், "மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என முதலில் கூறியவர் பால் தாக்கரே தான். ஆனால் அவரது மகன் இந்த விவகாரம் தொடர்பாக ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிய வேண்டும் என்று தான் அவுரங்காபாத் பொது கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அடுத்து அவரை கைது செய்யலாம். நவநிர்மாண் சேனாவினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எல்லா இந்துவும் அதை செய்வார்கள்" என்றார்.
இதேபோல சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், "சாலைகளில் நடக்கும் எங்கள் கட்சியினரின் போராட்டத்தை அரசாங்கம் பார்க்கும். வழக்குகளை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
Related Tags :
Next Story