தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மாடு செத்தது


தேன்கனிக்கோட்டை அருகே  யானை தாக்கி மாடு செத்தது
x
தினத்தந்தி 3 May 2022 10:22 PM IST (Updated: 3 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மாடு செத்தது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சித்தலிங்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் உளீரன். விவசாயி. இவருக்கு தமிழக அரசால் இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கறவை மாடு ஒன்று வழங்கப்பட்டது. இதை அவர் பராமரித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாட்டை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அவர் விட்டு இருந்தார். அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தாக்கி மாடு செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். யானை தாக்கி இறந்த மாட்டுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உளீரன் கோரிக்கை விடுத்தனர்.

Next Story