கிருஷ்ணகிரி அணை பூங்காவில் புள்ளிமான் செத்தது


கிருஷ்ணகிரி அணை பூங்காவில் புள்ளிமான் செத்தது
x
தினத்தந்தி 3 May 2022 10:22 PM IST (Updated: 3 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணை பூங்காவில் வயது முதிர்வு காரணமாக புள்ளிமான் செத்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையை பார்வையிட தினமும் கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள மான் பூங்காவில் இருந்த 17 வயதுடைய புள்ளிமான் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் பூங்கா பராமரிப்பாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கால்நடை டாக்டர் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வயது முதிர்வு காரணமாக மான் இறந்ததாக தெரிவித்தனர்.

Next Story