சூறைக்காற்றுக்கு மேற்கூரை சேதம்: மழையில் நனைந்த ரேஷன் பொருட்கள்


சூறைக்காற்றுக்கு மேற்கூரை சேதம்: மழையில் நனைந்த ரேஷன் பொருட்கள்
x
தினத்தந்தி 3 May 2022 10:22 PM IST (Updated: 3 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே சூறைக்காற்றுக்கு கடையின் மேற்கூரை சேதமடைந்ததால் மழையில் ரேஷன் பொருட்கள் நனைந்தன.

வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையின்போது வினாயகபுரம் ரேஷன் கடையின் மேற்கூரை பெயர்ந்தது. இதனால் ரேஷன் கடையில் வைத்திருந்த அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

Next Story