என்ஜினீயர் தற்கொலை


என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2022 10:30 PM IST (Updated: 3 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே கும்பளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் மகன் ஜம்பேரி (வயது 30). என்ஜினீயர். இவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் முடிவுகள் வெளியான போட்டி தேர்வு ஒன்றில், அவர் மதிப்பெண் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜம்பேரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story